Saturday, 13 March 2010
Home
வஞ்சியவள் எனக்காக PDF Print E-mail
http://galefraney.files.wordpress.com/2008/08/danielle-fairy1.gifசனத்திரளின் மத்தியிலே ஏற்றிவைத்த ஒளிபோலே
உனைஎந்தன் புத்தியிலே உறைக்கவைத்து சித்திரமாய்
வரைந்தது முழுநிலவாய் என்வாழ்வின் அனைத்துநாள்
இரவெல்லாம் பகலாக்க எனக்காக உனைப்படைத்து.

குதிரையின் வால்போல பின்முட்டிவரை உன்கூந்தல்.
பயிரிட்டு வளர்த்ததுபோல் அதில்மல்லிகைப் பூப்பந்தல்.
அதைப்பார்த்து எனக்குன்மேல் விதவிதமாய் ஒருஉந்தல்
இதயமெல்லாம் ஆகிப்போச்சு ஒருநொடியில் பலகந்தல்.

அம்புபூட்டிய வில்லைப்போல வளைந்தநிற்கும் புருவங்கள்.
மீன்தரையில் துடிப்பதுபோல அடித்துக்கொள்ளும் கண்கள்.
அதைஒளித்து ஒளித்துஎம்மை தேடவைக்கும் இமைகள்.
இமையுள்ளே ஒளிந்துநின்று எட்டிப்பார்க்கும் மணிகள்.

பிடித்துவைத்த பிள்ளையார்போல அதனிடத்தில் மூக்கு
அதற்கழகின் அழகுசேர்க்க வைரத்திலொரு ஊக்கு
கடித்துவிடத் தோன்றுமவள் கொவ்வைப்பழ உதடு
கடைந்தெடுத்த வைரம்போல ஜொலிக்குமவள் பற்கள்.

பாய்ந்துசெல்லும் ஆறுபோல அவள்தலையில் நேருச்சி
வந்துசேரும் கடல்போல பரந்திருந்த பெருநெற்றி.
நெற்றிக்கண் இருப்பிடத்தில் சின்னதாக ஒருபொட்டு
ஒற்றைமணித் தோடுபோட்டு வளைந்திருந்த இருகாது.

பஞ்சுமிட்டாய் கலரினிலே அவளுடைய கன்னம்
பஞ்சுபஞ்சாய் ஆக்கிவிடும் எம்மையது திண்ணம்.
கொஞ்சுஅவளை என்றுசொல்லி எம்மனது உனனும்.
மிஞ்சிவிட்டால் அவள்கையால் எம்கன்னம் மின்னும்

பிரம்மனவன் படைத்துவிட்டான் அழகின் சிகரத்தில்
எண்ணத்திலும் அவளைவைத்தான் வானத்தின் உயரத்தில்
அச்சம்மடம் நாணத்துடன் அவளிருந்தாள் பயிர்ப்பில்
காரிருளில் உள்ளஒரு ஒளிவிளக்கின் வடிவில்

வஞ்சியவளை எனக்காகப் படைத்துவிட்ட முருகா
பஞ்சியின்றி தூதுசென்று என்சுகம்சொல் இறைவா
நெஞ்சினிலே கவலையின்றி காத்திருக்கச்சொல் அவளை
வஞ்சமின்றி உணவுண்டு மகிழ்ந்திருக்கச்சொல் தலைவா.

மன்னித்திடு இறைவா தூதுசெல்லச் சொன்னதற்கு
கன்னியவள் எனைநினைத்து தூக்கமின்றி இருப்பவளை
புண்ணியவான் நீதானே படைத்தவரைக் காக்கவேண்டும்.
அந்நியனாய் நில்லாது சேர்ந்துநின்று காத்திடுவாய்.

எம்மைநீ பிரித்துவைத்து வேடிக்கை பார்க்காமல்
வாழ்க்கையை கரிக்கவைத்து வாடிக்கை ஆக்காமல்
சேர்த்துவிடு இருவரையும் சிறப்பிடத்தில் ஒன்றாக
பார்த்து விடு எங்களையும் பக்குவமாய் சேயாக.
 
நேற்றும் இன்றும் நாளையும் - முதற்காதல் PDF Print E-mail

http://3.bp.blogspot.com/_9I-bVOtqfEg/SUnodEmrpgI/AAAAAAAAAAM/WO6lU7XDa-g/S220/ANITHA.jpg

சிரித்து விளையாடிய அந்த சிறிய மனசு
அசைக்க முடியாதென இறுகியிருந்த இளைய மனசு
உன்னிடம் தான் தோற்றது முதன் முதலாய்
அரும்பிய வயதிலேயே ஆட்டம் கண்டது
உன்னால் தான்

பள்ளிக் காதலா இல்லை பருவக் காதலா
தெரியவில்லை எனக்கு
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
வென்றுவிட்டாய் நீ

அப்போதெல்லாம் நான்
தினமும் உன்னைத் தேடினேன்
கணமும் உன்னையே நாடினேன்,
நினைவில் தினமும் நீயானாய்
கனவில் வாழ்ந்தேன் உன்னுடன்
நிஜத்திலோ நீ தொலைவானாய்

நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி

நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்

இறுதியாக ஒரு வேண்டுதல் இறைவனிடம் மட்டும்
மறு உலகிலாவது நானும் நீயும் ஒன்றாக வேண்டும்
பழைய நண்பர்கள் கூட்டத்துடன்
புதிய நண்பர்கள் முன்னிலையில்
சந்தோஷமாக நித்தியம் வாழ வேண்டும்
 

 
முதல் குழந்தை.. PDF Print E-mail
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/Data/interestingmywebduniacom/images/parenting.jpgபெண்பார்த்து திரும்புகையில்
மண்பார்த்து நின்றபோதும்
பொயிட்டு வருகிறோம் என்றுசொல்ல
சட்டென கண்பார்த்து சிறுதலையாட்டி
உறவறியாமல் சம்மதம்தெரிவித்து
உள்ளம் நுழைந்தாள் அப்போதே...

இடம்விட்டு இடம்நகர்ந்து
இல்லத்தில் தீபமேற்றி
தானும் உணவு உண்டு
தண்ணீரையும் சுத்தம்செய்யும் மீனாய்
அன்புடனும் அறமுடனும்
இனக்கமுடன் இல்லறம் நடாத்தி
இருகுழந்தை ஈன்றேடுத்து இயங்கும்
என்ன்வளே எனக்கு முதல்குழந்தை.
 
நீங்காத நினைவுகள் PDF Print E-mail
http://3.bp.blogspot.com/_d13pC2OAjiw/RwN1iKv18WI/AAAAAAAAAC0/ZNN2Lk41myc/s400/SadGirl.jpgகண்ணீர் சிந்தும்
வாழ்க்கையிலே
காலங்கள் சிதறிப்
போயின இன்று .....

இளமையின் இனிமைகள் யாவும்
வறுமையில் கரைந்தன
நினைவுகள் யாவும்
இதயத்தில் பதிந்தன
கவிச்சுவடுகளாய் .......

உறவுகளின் பாசங்கள் சில
வேஷங்களாக தோன்றியபோதும்
பழகிய நினைவுகள் சில
இதயமதை நனைத்துத் தான்
சென்றது இதமாக ......

எதிர்கால இலட்ச்சியங்களும்
எண்ணிலடங்கா கனவுகளும்
கரைந்தே சென்றது
கார்மேகம் போல ....

வார்த்தைகளின் தவிப்புக்கு
இலக்கிய வரிகளைக்
கூற இயலாது
நாளும் தவிக்கும்
ஓர் உள்ளம் இது ......
 
இப்படியும் ஒரு பெண் !!!!!!!! PDF Print E-mail
http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/0910/12/images/img1091012072_1_1.jpgஉயிர் அறுக்கும்
வார்த்தைகளால் பேசினாள் !!

காயங்களால் மட்டுமே
என்னை தீண்டினாள் !!

என் இதயத்தை பறித்து
அவள் கூந்தலில் சூடினாள் !!

சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
என் ரத்தத்தை எரித்தாள் !!

எப்போதும் சிரிக்காதவள்

என் மரணத்தின்போது
கண்டிப்பாக சிரிப்பாள் !!!!
 
தொ(ல்)லைகாட்சிப்பெட்டி PDF Print E-mail
http://www.tamilwin.net/newsimages/tholaikkadsippeddi8.jpgபணக்காரர்களிடம் மட்டும்
இருந்தது அன்று.
ஏழைகளிடம் குடிசையிலும்
இருக்கின்றது இன்று
நடுத்தர குடும்பத்திலோ
சொந்தமாக வாங்கியது ஒன்று
அரசாங்கம் தந்து ஒன்று
பிரித்துக் கொண்டனர்.
பெரியவர்கள் பார்க்க ஒன்று
சிறியவர்கள் பார்க்க ஒன்று
வக்கிரம் வளர்க்கும் தொடருக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
பாலுணர்வை ஊட்டும் பாடலுக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
கேலி பேசும் நகைச்சுவைக்கு
அடிமையானது ஒரு கூட்டம்..
வன்முறை போதிக்கும் திரைப்படத்திற்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
அடிமைகள் பலவிதம்.
சிந்திக்க, செயல்பட, படிக்க, எழுத
மறந்து சோம்பேறிகள் பெருகினர்.
பரிசுப்போட்டி அறிவித்து விட்டார்கள்.
பாவம் இனி தமிழன்
இமைக்க மறந்து
தொடர்கள் பார்ப்பான்
 
தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள் PDF Print E-mail
http://2.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S0A2BPBjmLI/AAAAAAAABDY/NalYEing9Ic/s200/semmoli+manadu.jpgதமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
தனிப் பெரும் இடம் பெற்ற இலக்கியம் திருக்குறள்

தமிழ் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்

கடவுள் என்ற சொல்லே இடம்பெறாத திருக்குறள்
கற்க்கண்டை மிஞ்சும் கனிச்சுவைமிக்க திருக்குறள்

வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்

உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்

உலக மொழிகள் யாவிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்

அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்

மனிதநேயம் மனதில் விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவை போதிக்கும் திருக்குறள்

ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்

சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்

தமிழுக்கு செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்கு பெருமை ஈட்டித் தந்த திருக்குறள்

காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய்
டால்ஸ்டாயின் குரு திருவள்ளுவர்
 
நவீன பொங்கல் PDF Print E-mail
http://3.bp.blogspot.com/_jBO0L1Uop_4/SX2pF_-Y8AI/AAAAAAAAAFM/SAeROkUCIuc/s400/pongalஇன்று தைப்பொங்கல்.
எல்லோரும் ஓடி
தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்;

நான் எட்டி சாமியை பார்த்தேன்
சாமியால் எங்களையோ
தொலைகாட்சியையோ
சபித்துவிட முடிய வில்லை ;

'பொங்கலோ பொங்கல்'
தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்;

சாமி வெளியே வந்து
எட்டிப் பார்கிறார்
காஸ் ஸ்டவ்வில்லிருந்து
பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது;

சாமி கரும்பை தேடினார்
கரும்பு தோலுரிக்கப் பட்டு
துண்டு துண்டாக வெட்டி
பாலித்தின் பையில் போட்டு
சூப்பர் மார்க்கட்டில் விற்றதை
வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்ததாக
நான் சாமியிடம் சொல்லவே இல்லை;

சாமி வராண்டாவிற்கு வந்து
எங்கே மாடு.. வயக்காடு..
எதையுமே காணோமே என்றார்
என்னால் சாமியை -
சபித்துவிட முடியவில்லை

சாமி இன்னும் -
அந்த காலத்துலயே இருக்கு!

 
வெகு சிறிய காலமே வாழ்க்கை! PDF Print E-mail
http://2.bp.blogspot.com/_KrCjUAJLEME/Sc9gN4V5e4I/AAAAAAAACZo/qlkUeC_p39U/s400/oo.gifஒரு கால சுவடின் கண்களிலிருந்து
பிறக்கிறது நம் வாழ்வின் மீதான கோபம்;
கொட்டி அழுதிடாமல் மனதில் கத்தியழும்
வாழ்விற்கே - உனக்கும் எனக்கும் போட்டி;

ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ
வேலை இருக்குமோ போகுமோ
பணம் கிடைக்குமா கிடைக்காதா
நாளை இருப்பேனா மாட்டேனா.........???

கேள்விகளோடு மட்டுமே கனத்து போய்
நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன்
பிறப்பின் காரணம் புரியும் முன்
திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள்
உயிர் பிரிகிறதே தோழா?????????

வாழ்வொன்றும் அத்தனை பெரிதில்லை
வாழும் போதே திருத்திக் கொள்ளல் தகுமோ!!
 
அன்புள்ள அம்மாவுக்கு PDF Print E-mail

http://1.bp.blogspot.com/__VB9gb7uNgA/SnU1kBAJe9I/AAAAAAAAAGE/2082kl8m9Ek/s320/amma.bmp

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு
உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ?
கருவில் சுமந்த காலம் முதல் நம்மை
கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய்
தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை
தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய்
தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவர் தாய்
சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய்
தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய்
தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய்
பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய்
ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய்
தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய்
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய்
சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய்
அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய்
உடலில் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய்
உணர்வு ஊட்டிய உன்னத உயர்ந்த உறவு தாய்
பேசாத கல்லை வணங்குவது முடநம்பிக்கை
பேசும் தாயை வணங்குவது தன்னம்பிக்கை
கண்ணிற்கு புலப்படாத கடவுளை வணங்குவதை விட
கண்ணிற்கு புலப்படும் தாயை வணங்கு உயர்ந்திட
மனைவியை மதித்திரு தவறில்லை ஆனால்
அம்மாவை துதித்திடு தவறில்லை சரியே

 
கூட்டுக் கிளி PDF Print E-mail

http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/STTFQZI4SaI/AAAAAAAAC0c/rBPqMaOkZEc/s400/parrots.jpgஅருவி போல் இருந்தவள் நான்
அடைபட்டுக் கிடக்கிறேன்


காற்றை போல் இருந்தவள் நான்
கல்லை போல் இருக்கிறேன்

 

மலரை போல் இருந்தவள் நான்
மணம் இழந்து இருக்கிறேன்


பெரும் சிரிப்புகள் சிதைந்து
புன்னகையாய் ,குறுஞ்ச் சிரிப்பாய்
அதையும் அளந்து பார்த்து
அதட்டி வைக்கும் தாய்


ஓடி ஆடிய என்னை
நாடி வந்த வளர்ச்சி
பாடித் திரிந்த நான்
பல் இளிக்காமல்
பள்ளிக்கு செல்லும் நிலையில் விட


குளத்து நாரையை
கூட்டுக் கிளியாக்கிய வளர்ச்சி
நான் வெறுக்கும் மலர்ச்சி

 
அழகு பெற PDF Print E-mail

http://padmahari.files.wordpress.com/2009/07/chinere_new_year_by_schumy330.jpg

அமாவாசை நாளில் தேடினேன்...
நிலவை காணவில்லை..

காரணம் ...........

தவம் செய்ய சென்றிருக்கும்
உன்னை போன்ற
அழகு பெற

 

 

 
தோல்வி இல்லை PDF Print E-mail
http://divyanovel.files.wordpress.com/2008/12/crying-girl.jpgவிரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!
 
அறிவுப்புதையலே…! PDF Print E-mail
கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே

மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே

படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே

பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே

செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே

செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே

செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே

சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே

பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே

பண்பை விதைத்து வரும் போதகரே

ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே

ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே

போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே

போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே

தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே

தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே

அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே

அனûத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே

உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை

உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது

நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்

நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!
 
எழுதுதாள் ஏந்திழை PDF Print E-mail

எங்கோ மூலையில்
ஏனோ தானோ என்று
என்பாட்டில் கிடந்த என்னை
எட்டி எடுத்து
தட்டித் பின் தடவி
மல்லாக்காய் போட்டு
ஏறி நின்று
எழுந்து....
விழுந்து....
கிடந்து....
என்மேல் எழுதினான்
ஒருகவிஞன்

 

பேனாவின் அழகில்
மயங்கியதாலே
கூரியமுனையால் குத்துப்பட்டேன்.
கீறப்பட்டேன்
பின் கிழிக்கப்பட்டேன்.

என்மேல் கிறுக்கியவனை
விட்டுவிட்டு
என்னைக் கிறுக்கி என்றது
உண்மையற்ற உலகம்.

நீ எழுதி...எழுதி
எழுந்தபோது
கத்திக் கத்தியே
என் காதலைச் சொன்னேன்
வேதனை தாங்காது
அழுது அழுதே சிரித்தேன்

உலகமே உன்கவிதைகளை
வாசித்து வசியப்பட்டு
உன்வசப்படும் போது
பொறாமையில் பொருமுவேன் -நீ
எனக்கு மட்டும் உரியவன் என்று

உன்னைச் சுமப்பதால்
கண்டவன் நிண்டவன்
கைகளில் நான் வேசியாகி...
விபச்சாரியாக
விமர்சிக்கப்பட்டேன்

நீ யோசித்ததை
யார் யாரோ வாசித்தனர்
ஆசித்தனர்....
பூசித்தனர்.....
உன்னால் வாசிக்கப்பட்ட
நான் மட்டும்....
தூசிக்கப்படுகிறேன்.
கண்டவன் நிண்டவன்
கைகளில்.....

நீ எழுதிப்போன தாள்
நான் என்பதால்
யாரும் என்மேல் இனி
எழுதப்போவதில்லை.

என் அடிமடியில்
நீ மறைத்து எழுதிய
கையெப்பம் மட்டும்
உன் முகவரி தெரியாது
வளர்கிறது என் வயிற்றில்

உன்னை வெளியுலகிற்கு
வெளிச்சம் போட்டுக் காட்டியவள்
இருளிலல்லவா கிடக்கிறேன்.
கண்ணா!!
விழி மொழியாயோ?
வாழ்வில் ஒளி தருவாயோ?

என்கருவறை சுமக்கும்
உன் கவிதைகளுக்கு
காசுக்களால் காணிக்கை
பணத்தினால் பட்டாபிசேகம்
என்கருவறைக்கு மட்டும்
கண்ணீர்தானா காணிக்கை???
இதுதான் உலகின் வாடிக்கை
பெண்ணாய் போனதால்
எல்லாமே கேளிக்கை...வேடிக்கை!!!

 
உழைப்பின் உயர்வு! PDF Print E-mail
http://tamilvishai.com/home/wp-content/uploads/2009/09/taj20mahal203.jpgதாஜ்மஹாலைக் காணுகையில்

சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!

உழைப்பாளியே உனது

உன்னதமான உழைப்புத்தான்!

கோவில்களைக் காணுகையில்

கடவுளர் தெரிவதில்லை.......

சிற்பிகளின் உழைப்புத்தான்

சிந்தையில் உதிக்கிறது!

சோறு நான் உண்கையிலே

சம்சாரத்தை நினைப்பதில்லை....

விவசாயியே உந்தன்

வியர்வைதான் நினைவுக்கு வருகிறது!

ஆடை அணிந்திருக்கும்

ஆள் எனக்குத் தெரிவதில்லை....

நெசவாளியே நீதான்

தெரிகிறாய் என் சிந்தைக்கு!

ஒவ்வொன்றிலும் தெரிவது

உழைப்பின் உயர்வே!
 
அரபிக்கடல் போல..! PDF Print E-mail

 

அரபிக்கடல் போல
அழகாய்த்தானிருக்கிறாய்..!
வங்கக் கடல் போல
வனப்பாய்த்தான் இருக்கிறாய்..!
இந்தியப் பெருங்கடல் போல
இன்பமாய்த்தான் இருக்கிறாய்..!
உன்னுடன் பயணிக்க வேண்டும்
என்ற ஆசை எனக்கு…
காதல் என்னும் படகைத்தான் காணோம்..?
 
கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..! PDF Print E-mail

 

கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

 
நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

 பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

  உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

  உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

  ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!
 
உன் கடைக்கண் பார்வை..! PDF Print E-mail

 

வானத்தில் ஏழு வண்ணங்கள்
சேர்ந்தால்…
அது வானவில்..!
நினைவில் பல எண்ணங்கள்
சேர்ந்தால்…
அது கவிதை..!
நிகழ்வில் நம் மனங்கள்
சேர்ந்தால்…
அது காதல்..! அதுதான் காதல்..!

 

சூரியனின் பார்வை
பட்டால்தான்
இந்த உலகம் விழிக்கும்..!
சந்திரனின் பார்வை
பட்டால்தான்
அந்த இரவும் விழிக்கும்..!
உன் கடைக்கண்
பார்வை பட்டால்தான் பெண்ணே
என் காதல் விழிக்கும்..!
 

 
பொல்லாத ஓர் இரவில்..! - மும்பை தாக்குதல் முதலாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி PDF Print E-mail

 

பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தனர்…
அமைதிப் பெருமூச்செய்தினர்…


உயிரினை இழந்தோர் பலபேர்
அங்கே உறவுகளை
இழந்தோர் பலபேர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே…. மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டொன்று

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…
எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்..
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…

 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Results 1 - 30 of 88

Polls

How will you rate this site?